2022 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'கோப்லின் மோட்' என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி அறிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி ஆண்டுதோறும் சிறந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பை நடத்தி வருகிறது. ஒரு ஆண்டின் சிறந்த சொல்லை கடந்த பனிரெண்டு மாதங்களின் மனநிலை மற்றும் எண்ணங்கள் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் மெட்டாவெர்ஸ் (Metaverse), ஐஸ்டாண்ட்வித் (IStandWith), கோப்லின் மோட் (GoblinMode) போன்ற மூன்று வார்த்தைகள் கொடுக்கப்பட்டது.
![]()
|
கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் டிச. 2ம் தேதிவரை ஆன்லைனில் நடந்த வாக்கெடுப்பில் 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 'கோப்லின் மோட்' என்ற வார்த்தை சுமார் 3.40 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக வேக்ஸ்(VaX) தேர்ந்தெடுக்கப்பட்டது.
'கோப்லின் மோட்' என்பது பொதுவாக உள்ள விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவர் விருப்பமானவற்றை எல்லாம் செய்தல், தன் நலன் சார்ந்து சிந்தித்தல், சுயவிருப்பம், குற்றவுணர்வு இல்லாமல், பேராசையுடன் நடந்து கொள்ளுதல் இவை அனைத்தும் இந்த வார்த்தையில் அடங்கியுள்ளன. முக்கியமாக வீட்டை அலங்கோலமாக்கி, சோம்பேறித்தனமாக வாழ்பவர்களின் மனப்பான்மையை குறிக்கிறது.
![]()
|
உதாரணமாக, கோவிட் காலத்தில் பலரும் தங்கள் வீடுகளுக்குள் அடைந்து இருந்தார்கள். மனதளவில் கோப்லின் மோட்-ல் இருந்ததால் 'கோப்லின் மோட்' வார்த்தை மீண்டும் இந்த ஆண்டு மிகவேகமாக பரவி ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக, கடந்த 2009 ல் கோப்லின் மோட் என்னும் வார்த்தை டிவிட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
![]()
|
இதுகுறித்து பேசிய ஆக்ஸ்போர்டு மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்வா கிராத்வோல்(casper grathwohl), “நம்முடைய அனுபவத்தில் கிடைத்த வார்த்தையான 'கோப்லின் மோட்' என்பதை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்” என தெரிவித்தார்