மயிலாடுதுறை: சீர்காழி அருகே உயர் மின்னழுத்தத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா குடமுரட்டி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் கோளாறு காரணமாக அடிக்கடி உயர் மின்னழுத்த தாக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன் உயிர் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என அச்சத்துடன் உள்ளனர். இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென 414 வோல்டேஜ் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இரு மடங்கு அதிக உயர் மின் அழுத்தத்தால் கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விளக்கு மட்டுமின்றி டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது. இனியாவது இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிதாக அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.