பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் பிலிப்ஸ் நிறுவனம் ஹோம் அப்ளையன்ஸ், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மட்டுமல்லாது, ஏராளமான கேட்ஜெட்களையும் விற்பனை செய்து வருகிறது. டிவி, ஃபேன், ஹெட்போன்ஸ், ஸ்பீக்கர், லைட்டுகள் என சந்தையில் விற்பனையாகும் பிளிப்ஸின் சாதனங்கள் எண்ணில் அடங்காதவை. 90களில் டிவி மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் விற்பனையில் பெரும்பாலான மக்களின் தேர்வாக பிளிப்ஸ் நிறுவனம் இருந்தது. ஏற்கனவே சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்பீக்கர்கள் மற்றும் சவுண்ட் பார்கள் விற்பனையில் போட்டி நிலவும்நிலையில், தற்போது இரண்டு புதிய சவுண்ட்பார் மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம் பிலிப்ஸ் நிறுவனம் போட்டியில் களமிறங்கியுள்ளது.
![]()
|
டேப்8947(TAB8947) மற்றும் டேப்7807 (TAB7807) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருப்பதனால், நமக்கு சினிமாடிக் அனுபவத்தை வழங்கும். அதுமட்டுமல்லாமல், இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
![]()
|
டேப்8947 சவுண்ட்பார் ஆனது, 330 வாட்ஸ் பவர், 360 டிகிரி சரவுண்ட் எஃபெக்ட், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. மேலும், இது 3.1.2 சேனல்களை கொண்டிருப்பதால் எந்த விதமான அறையிலும் சவுண்ட்-ஐ முழுமையாக அதிக தெளிவாக கேட்க முடியும். அதேபோல், டேப்7807 சவுண்ட்பார் ஆனது 3.1 சேனல்கள் மற்றும் இரண்டு 8 இன்ச் சக்திவாய்ந்த சப்-வூஃபர்களை கொண்டுள்ளது. இதுதவிர 3D சவுண்ட், 620 வாட்ஸ் பவர் அவுட்புட் மற்றும் ஆறு இண்டகிரேடெட் டிரைவர்களை கொண்டுள்ளது.
மேலும், முக்கிய அம்சமாக, பிலிப்ஸ் ஈசிலின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. அதுபோக புதிய சவுண்ட்பார்கள் ஈக்வலைசர் மோட்கள், பேஸ், டிரெபில் மற்றும் வால்யூம் செட்டிங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.
![]()
|
பிலிப்ஸ் டேப்8947 மாடலின் விலை ரூ.35,990 எனவும் டேப்7807 மாடல் ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பார்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ளலாம்.