சென்னை:கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08 ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
10கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் நாளை காலை கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை( 8 ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.08) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
.