நியூயார்க் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ஆறு இந்திய பெண்கள் இடம்பிடித்துஉள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பட்டியலில் அவர் இடம் பெற்று வருகிறார்.
இவரை தவிர, ஹெச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, 'செபி' எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மாதாபி புரி பக், இந்திய ஸ்டீல் ஆணையம் தலைவர் சோமா மொண்டல், 'பயோகான்' நிறுவன செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 'நைகா' நிறுவனர் பல்குனி நய்யார் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.