நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீரான வேகத்தில் வளர்ச்சி அடைகிறது. ஜனாதிபதி, பிரதமர் பல வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர், பா.ஜ.,
மத்திய அரசின் சதி!
கர்நாடகாவின் பெலகாவியில் மராத்தி மக்களும், வாகனங்களும் தாக்கப்படுவது, மத்திய அரசின் ஆதரவின்றி நடக்காது. மஹாராஷ்டிராவின் சுயமரியாதையை நசுக்கி, அதன் முதுகெலும்பை முறிக்கும் சதி துவங்கியுள்ளது.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் குழு
ராமா ராவுக்கு போதை பழக்கம்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ராமா ராவுக்கு போதைப் பொருள் பழக்கம் உள்ளது. அவரது ரத்த மாதிரியை பரிசோதித்தால் உண்மை தெரியும்.
பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானா மாநில தலைவர், பா.ஜ.,