வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ஸ்டாலின் நேற்று, தென்காசிக்கு ரயிலில் பயணித்தார். சொகுசு வசதியுள்ள 'சலுான்' பெட்டி, அவருக்காக ரயிலில் இணைத்து இயக்கப்பட்டது.
![]()
|
தமிழக அரசின் சார்பில், தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இன்று நடக்க உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு, 'பொதிகை' அதிவிரைவு ரயிலில், நேற்று இரவு, 8:44 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
வி.ஐ.பி.,க்கள் பயணம் மேற்கொள்ளும் பிரத்யேகமான 'சலுான்' பெட்டி, பொதிகை ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அமைச்சர்கள் நேரு, பெரியசாமி மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் என பலரும் பயணம் செய்தனர்.
முதல்வரான பின், ஸ்டாலின் முதன் முறையாக ரயிலில் பயணம் செய்கிறார்.
![]()
|
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செல்வதற்காக, சலுான் என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை ரயில்வே உருவாக்கி உள்ளது.
குளியலறை வசதிகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறை, பெரிய ஹால், உணவு பரிமாறும் அறை, சோபா, நாற்காலி, சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. நட்சத்திர ஹோட்டல் இருக்கும் அனைத்து வசதிகளும், இந்த பெட்டியில் இருக்கும்.
இந்த சொகுசு வசதி பெட்டிக்கான கட்டணம், 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement