வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- -பல்வேறு காரணங்களால் பிற மதங்களுக்கு மாறி, தற்போது தாய் மதம் திரும்பியோருக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விசேஷ பூஜைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
![]()
|
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சென்னை தி.நகரில் உள்ள வேதாந்த பவனில், வேற்று மதங்களில் இருந்து தாய் மதம் திரும்பியவர்களுக்கு, நேற்று காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, வரவேற்பு அளிக்கும் நிகழ்வு நடந்தது.
இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் பங்கேற்றனர்.
வேதாந்தம் பேசியதாவது:
இஸ்லாம் மதம் துவங்கியது அரபு நாட்டில்; கிறிஸ்துவ மதம் துவங்கியது ஜெருசலேம் நகரில்; அதேபோல் ஹிந்து மதம் துவங்கியது இந்தியாவில் தான். அதனால் தான், தாய் மதம் என்கிறோம்.
'அஹம் பிரம்மாஸ்மி' என்ற 'நான் பரம்பொருளாக இருக்கிறேன்' என்று சொல்கிறது, ஹிந்து மதம். இங்கு மதமாற்ற நம்பிக்கை கிடையாது; மனிதன் சுதந்திரமானவன்.
![]()
|
படையெடுப்பு மற்றும் பல நெருக்கடியால், பலர் தாய் மதத்தை விட்டு பிற மதங்களுக்கு சென்றனர். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன், 18 அத்தியாயத்தில் உபதேசம் கூறினார்.
பின், 'நான் சொன்ன விஷயங்களை வைத்து, நீ முடிவு செய்' என்றார். தத்துவத்தின் அடிப்படையில்தான் ஹிந்து மதம் வளர்ந்துள்ளது.
உலகம் பஞ்ச பூதங்களால் உருவானது. தாய் மதம் திரும்பியோரின் நன்மைக்காக, சிறப்பு ஹோமம் வாயிலாக, அந்த பஞ்ச பூதங்கள் ஆகர்ஷணம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement