குஜராத்தில் பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகள்

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விற்கு கடந்த முறையை விட தற்போது 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், தற்போதும் பின்னடைவை சந்தித்துள்ளது.குஜராத் சட்டசபைக்கு டிச.,1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று(டிச., 8) நடந்தது. ஆரம்பம் முதலே அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.தற்போதைய நிலையில்
GujaratElectionResult,AssemblyElections2022, bjp, Congress,  குஜராத் தேர்தல், காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விற்கு கடந்த முறையை விட தற்போது 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், தற்போதும் பின்னடைவை சந்தித்துள்ளது.

குஜராத் சட்டசபைக்கு டிச.,1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று(டிச., 8) நடந்தது. ஆரம்பம் முதலே அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.



latest tamil news

தற்போதைய நிலையில் 150 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் 7 வது முறையாக அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ., தற்போது கூடுதலாக 59 தொகுதிகளில் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ளது.



latest tamil news

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியானது 16 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 61 தொகுதிகளை இழக்கும் சூழ்நிலையில் உள்ளது.



latest tamil news


கடந்த தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத ஆம் ஆத்மி, தற்போது 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.


கடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் - 1, பாரதிய பழங்குடியின கட்சி - 3 சுயேச்சைகள் - 2 என மற்றவர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (7)

Sampath Kumar - chennai,இந்தியா
08-டிச-202220:55:32 IST Report Abuse
Sampath Kumar நீங்க பீத்திக்க வேண்டியது தான் அனால் மற்ற காட்சிகள் கணிசமாக வாக்கு வாங்கி இருக்கிறாரால் என்ன பாதை தினமலர் மறக்க வேண்டாம்
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
08-டிச-202217:25:05 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan வந்தியதேவ வல்லவரையன் சார், உங்களுக்கான பதில் "முடியும் ஆனால் முடியாது" என்பதுதான். மக்கள் உழைத்து முன்னேற வழிவகை செய்து, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சமநீதி, போன்றவற்றில் பொறுப்புடன் செயலாற்றி, ஊழலற்ற நிர்வாகமும் செய்தால் ஒரே கட்சியால் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும். அதே சமயம் மக்கள் ரோபோக்கள் அல்ல. எதிர்கட்சிகளிலும் நல்லவர்கள் உருவாக முடியும். ஆகவே சில காலத்திற்கு பிறகு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பவே செய்வர். ஆகையினால் ஒரே கட்சியால் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்பதும் உண்மையே. ஆனால் பிஜேபி வேறு மாதிரி. இங்கு திறமை உள்ள யார் வேண்டுமானாலும் கட்சியில் முன்னுக்கு வர முடியும். உட்கட்சி ஜனநாயகம் ஓங்கி சிறந்து விளங்கும் கட்சி பிஜேபி என்பது மறுக்க முடியாத உண்மை.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
08-டிச-202214:52:38 IST Report Abuse
sankar இது பெரிய அதிசயமா? மொத்த பிஐபி டெல்லி மந்திரிங்க செம துட்டுடன் முகாம் போட்டு தான் ஜெயிக்க முடிந்தது.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
08-டிச-202216:13:32 IST Report Abuse
vadiveluஇப்படித்தான் இன்னும் இருபது வருடங்களுக்கும் ஜெயிக்கும், நம்ம இப்படியே சொல்லி கிட்டு ஆறுதல் அடைய வேண்டியதுதான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X