இங்கிலாந்தின் கடற்படை, முதல் முறையாக ஒரு ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை வாங்கவிருக்கிறது. தானோட்டியாக இயங்கும் இந்த நீர்மூழ்கி பலவித போர் தந்திரங்களுக்கு உகந்தது. 'செடஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கப்பலை, எம்-சப்ஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தயாரித்துத் தரும்.
அதன் செயல்பாட்டைப் பொறுத்து மேலும் பல செடஸ் நீர்மூழ்கிகளை இங்கிலாந்து கடற்படையில் சேர்க்கும்.
கடலடியிலிருந்தபடி வேவு பார்ப்பது, எதிரி கப்பல்களை அழிப்பது, நிலப் பகுதி மீது எதிர்பாராத ஆயுத தாக்குதல்கள் நடத்துவது என்று பல போர் முறைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் நீர் மூழ்கிக் கப்பல். இதே பணிகளை, செடஸ் நீர் மூழகி, ஆட்கள் இன்றி சிறப்பாக செய்யும்.