சென்னை: குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,8) நடக்கிறது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ., 154 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 92 இடங்களே தேவைப்படும் நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அங்கு தொடர்ச்சியாக 7வது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடிக்கிறது.
குஜராத்தில் பா.ஜ., வெற்றி குறித்து தமிழக பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், ‛குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. வளர்ச்சி, முன்னேற்றத்தை தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கட்சியால் வழங்க முடியும் என்பதை பா.ஜ., நிரூபித்து காட்டியிருக்கிறது' என்றார்.