புதுடில்லி: டில்லியில் சில நாட்களில் கொலை செய்து, சடலங்களை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, காட்டு பகுதியில் துண்டுகளை வீசும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்கேஸ் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை இன்று (டிச.,08) போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நடந்தது. தொடர்ந்து, டில்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மேற்கு டில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில், சூட்கேஸ் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை இன்று (டிச.,08) போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஒரு சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து வாய்க்காலில் இருந்த சூட்கேஸ் பெட்டியை வெளியே எடுத்தது திறந்தபோது உள்ளே ஒரு பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது.
சூட்கேஸ் பெட்டிக்குள் இருந்த பெண்ணின் வயது சுமார் 28-30 வயது இருக்கலாம். உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.