வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
68 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஹிமாச்சல பிரதேசத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைத்த வரலாறு கிடையாது. காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. நவ.,12ல் இந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இன்று (டிச.,8) ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பம் முதலே இந்த மாநிலத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டது. காங்கிரசும், பா.ஜ.,வும் ஏறக்குறையே ஒரே தொகுதிகளில் முன்னிலை பெற்றன. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளில் முன்னிலை பெற்று 5 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. 40 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கடந்த முறையை விட அக்கட்சி 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தற்போது அங்கு ஆளும் பா.ஜ., 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த முறையை விட 19 தொகுதிகள் குறைவாகும். பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் சொந்த மாநிலம் ஹிமாச்சல பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.