தென்காசி: தென்காசி மாவட்டம் இயற்கை, ஆன்மீகம், வீரத்திற்கு பெயர் பெற்றது ஆகும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்காசியில் ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.,08) துவக்கி வைத்தார். மேலும், அவர் ரூ.34.14 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியவதாவது: அதிகமான அருவிகளை கொண்ட, அணைகளை கொண்ட எழில் கொஞ்சும் மாவட்டம் தென்காசி. அதேபோல் இயற்கை, ஆன்மீகம், வீரத்திற்கு பெயர் பெற்றது. பூலித் தேவன் பிறந்த ஊருக்கு வருவதில் பெருமை கொள்கிறேன்.
தென்காசி மாவட்டத்தில் 80 லட்சம் முறை கட்டணமின்றி நகரப்பேருந்துகளில் பெண்கள் பயணித்துள்ளனர். புளியங்குடி- சங்கரன்கோவில் சாலை மேம்படுத்தப்படும். ஆலங்குளத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.