பிரசாரம் செய்த குஜராத்தில் தோல்வி: பிரசாரம் செய்யாத ஹிமாச்சலில் வெற்றி: ராகுல் 'ராசி' எது?

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
சிம்லா: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் பிரசாரம் செய்த குஜராத்தில் படுதோல்வியையும், பிரசாரத்திற்கு போகாத ஹிமாச்சலில் வெற்றிக்கனியையும் சுவைத்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.நடந்து முடிந்த ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஹிமாச்சலில் இழுபறி நிலை ஏற்படும்
HimachalPradeshElections, GujaratElections, Congress, Rahul, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், சட்டசபை தேர்தல், காங்கிரஸ், ராகுல், பிரசாரம், வெற்றி, தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிம்லா: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் பிரசாரம் செய்த குஜராத்தில் படுதோல்வியையும், பிரசாரத்திற்கு போகாத ஹிமாச்சலில் வெற்றிக்கனியையும் சுவைத்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.



நடந்து முடிந்த ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஹிமாச்சலில் இழுபறி நிலை ஏற்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கின்றது.



இத்தனைக்கும் அம்மாநிலத்தில் ராகுல் தேர்தல் பிரசாரமே செய்யவில்லை. அவரது சகோதரி பிரியங்கா மட்டும் சில இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அம்மாநில பா.ஜ., தலைவர்கள் தோற்றுவிடுவோம் என பயந்துதான் பிரசாரத்திற்கு ராகுல் வரவில்லை என்று விமர்சனம் செய்தனர். ராகுலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பாத யாத்திரையில் மும்முரமாக இருந்தார்.



latest tamil news

இந்நிலையில் தேர்தல் முடிவுகள், காங்.,க்கு சாதகமாக இருப்பதால் காங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் தேவையில்லையோ என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் நேரில் முகம் காட்டினால் தான் காங்கிரசுக்கு ஓட்டு விழும் என்ற கருத்தையும் மாற்றி உள்ளது.


ஹிமாச்சல் நிலைமை இப்படியிருக்க, குஜராத்தில் மட்டும் இரண்டு நாட்கள் ராகுல் பிரசாரம் செய்தார். ஆனால் அங்கு காங்., படுதோல்வியை சந்தித்துள்ளது.



latest tamil news

முகம் காட்டிய குஜராத்தில் முகவரியை தொலைத்தாலும், முகம் காட்டாத ஹிமாச்சலில் முகவரியை பெற்றதும் ராகுலுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் எதிர்காலத்தில் தனது தேர்தல் பிரசார உத்திகளை ராகுல் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (20)

09-டிச-202207:53:26 IST Report Abuse
பேசும் தமிழன் இனி ராகுல் நிலமை அதோ கதி தான்...தமிழ்நாட்டில் அழகிரி கூட ராகுல் வீட்டு வாசலில் பொய் நின்று கொண்டு.. தயவு செய்து தமிழகத்துக்கு பிரசாரம் செய்ய வர வேண்டாம் என்று அழுது புலம்புவார்.. அவர் ராசி அப்படி. ராகுல் போகும் இடத்தில் இருந்து எல்லாம் பிஜேபி வெற்றி எளிதாகிறது ...உண்மையில் ராகுல் பிஜேபி யின் பிரசார பீரங்கி தான் !!!!
Rate this:
Cancel
08-டிச-202222:54:17 IST Report Abuse
kulandai kannan உலகிற்கே தெரியும் அவரது ராசி....
Rate this:
Cancel
dgfdfhgfjh - chennai,இந்தியா
08-டிச-202221:32:07 IST Report Abuse
dgfdfhgfjh ராகுலின் நோக்கம் டெல்லி . குஜராத் அல்ல . மோடிக்கு கிடைத்தது குஜராத் மட்டுமே
Rate this:
09-டிச-202207:56:00 IST Report Abuse
பேசும் தமிழன்டில்லியில் ராகுல் நிலமை அந்தோ பரிதாபம் .....அங்கு காங்கிரஸ் கட்சியை பூதக்கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டும் ....டில்லி ஆட்களும் ....சும்மா வச்சி செஞ்சு இருக்காங்க கான் கிராஸ் காட்சியை !!!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X