'துடைப்பத்தை' உடைத்த குஜராத், ஹிமாச்சல் மக்கள்: பாஜ, காங்., நிம்மதி

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: டில்லி மாநகராட்சியை கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி, குஜராத்திலும், ஹிமாச்சலிலும் தலைகுப்பற விழுந்துள்ளது.குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலுடன், தலைநகர் டில்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடந்தது. டில்லி மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று (டிச.,7) நடந்தது. 15 ஆண்டுகளாக பா.ஜ., கைவசம் இருந்த டில்லியை ஆம்ஆத்மி அமோகமாக ‛அமுக்கியது'.இதைப்பார்த்து இன்று
Gujarat Elections, HimachalPradeshElections, AAP, Aam Aadmi Party, Aravind Kejriwal, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், சட்டசபை தேர்தல், தேர்தல் முடிவுகள், ஆம்ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி மாநகராட்சியை கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி, குஜராத்திலும், ஹிமாச்சலிலும் தலைகுப்பற விழுந்துள்ளது.


குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலுடன், தலைநகர் டில்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடந்தது. டில்லி மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று (டிச.,7) நடந்தது. 15 ஆண்டுகளாக பா.ஜ., கைவசம் இருந்த டில்லியை ஆம்ஆத்மி அமோகமாக ‛அமுக்கியது'.


இதைப்பார்த்து இன்று ஓட்டுகள் எண்ணப்பட்ட குஜராத்திலும், ஹிமாச்சலிலும் ‛துடைப்பம்' சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஆத்மி சரித்திரம் படைக்கும் என்று நாடு முழுவதும் பரவலாக பேச்சு எழுந்தது. ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.latest tamil news

குஜராத்தில் ஆம்ஆத்மி ஒற்றை இலக்கத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஹிமாச்சலில் நிலைமை மேலும் கவலைக்கிடம். ஒரு இடத்தில் கூட ஆம்ஆத்மி முன்னிலை கூட பெறவில்லை.


தங்களுக்கே ஆம்ஆத்மி கட்சி எதிர்காலத்தில் ஆபத்து ஆகிவிடுமோ என்று அச்சப்பட்ட பா.ஜ.,வும், காங்கிரசும் இப்போது ‛அப்பாடா' என நிம்மதி பெருமூச்சு விடுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (24)

g.s,rajan - chennai ,இந்தியா
08-டிச-202223:40:50 IST Report Abuse
g.s,rajan ஆம் ஆத்மி பிஜேபி யின் பினாமிக் கட்சி அதாவது நம்பர் "டூ",கணக்கில் காட்டப்படாத ஒன்று .அது ஓட்டைப் பிரிக்கும் கட்சி தான். ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
09-டிச-202208:59:14 IST Report Abuse
பேசும் தமிழன்அவர்கள் தான் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியை பின்னுக்கு தள்ளி...டில்லி மாநகராட்சியை கைப்பற்றி உள்ளார்கள்....அங்கு கான் கிராஸ் நிலமை தான் அந்தோ பரிதாபம் !!! பேசாமல் பப்பு கட்சியை கலைத்து விட்டு... ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து விடலாம் ..... நாட்டுக்கு நல்ல எதிர்கட்சியாவது கிடைக்கும் !!!...
Rate this:
Cancel
dgfdfhgfjh - chennai,இந்தியா
08-டிச-202221:30:15 IST Report Abuse
dgfdfhgfjh குஜராத்தில் காங்கிரஸ் நிம்மதியை கெடுத்தது மட்டுமல்லாமல் மோடிக்கு குஜராத்தில் சென்று அடைக்கலம் போக வழியையும் காண்பித்துள்ளது .
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-டிச-202221:03:21 IST Report Abuse
Vijay D Ratnam அர்விந்த் கெஜ்ரிவால் மிகவும் ஆபத்தான அரசியல்வியாதி. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். இலவசங்கள் என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளிவிட்டு டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்ததது போல மற்ற மாநிலங்களிலும் அதே வேலையை காட்டுகிறார். உழைத்து சம்பாதித்து அதில் ஒரு பகுதியை வரியாக கட்டும் மக்களின் பணத்தை எடுத்து இலவசம் என்ற பெயரில் வாக்குகளை விலை கொடுத்து வாங்க பார்க்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் இப்படித்தான் அள்ளிவிட்டார். ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம். காஸ் சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் நூறு ரூபாய் மான்யம் தருவோம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம், முதியோர், ஆதரவற்றோர் வாழ்க்கைக்காக மாதாமாதம் கொடுக்கும் நிதியை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவோம், நீட்டுக்கு தடை விதிப்போம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைத்து வழங்குவோம், விலைவாசியை குறைப்போம் என்றார்கள் ஏதாவது நடந்ததா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X