ஆமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை ஆம் ஆத்மி அபகரித்ததால் காங்., படுதோல்வி அடைய காரணமாக அமைந்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பா.ஜ.,158 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து 7 வது முறையாக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பா.ஜ., 52.76 %, காங்கிரஸ் 27.16%, ஆம் ஆத்மி 12.86 % ஓட்டுகளை பெற்றுள்ளன.
இதுவே கடந்த 2017 தேர்தலில், பா.ஜ.,வின் 49.1 %, காங்கிரஸ் - 44% ஓட்டுகளை பெற்றிருந்தது.

2017 ல் 0.1 % ஓட்டுகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சியானது தற்போது 12.86 % ஓட்டுகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கிடைத்த அதிக ஓட்டுகளானது காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டியது என தெரிவித்துள்ள அரசியல் நிபுணர்கள், தனது ஓட்டுகளை ஆம் ஆத்மி பெற்றதால் தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.