வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை வடிவமைத்ததற்காக மோடி தலைமையிலான பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்துள்ள குஜராத் மக்கள், இலவச திட்டங்களை அறிவித்தவர்களை நிராகரித்து விட்டனர் என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல் முடிவு தொடர்பாக அமித்ஷா வெளியிட்ட அறிக்கை: வளர்ச்சி மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் செய்தவர்களை நிராகரித்து, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை வடிவமைத்த மோடி தலைமையிலான பாஜ.,வுக்கு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்கி உள்ளனர்.

இந்த வெற்றியானது, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜ., மீது முழு மனதுடன் நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுகிறது. குஜராத் எப்போதும் வரலாறு படைக்கும். கடந்த 20 ஆண்டுகளில், மோடி தலைமையில், வளர்ச்சிக்கான அனைத்து சாதனைகளையும் பா.ஜ., உடைத்தது.
தற்போது குஜராத் மக்கள் ஆசி மூலம் கடந்த காலங்களில் படைக்கப்பட்ட சாதனைகளையும் பா.ஜ., உடைத்துள்ளது. மோடி மாடல் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார்.