ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாமியார் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன், 45. இவர், அவரது மனைவி குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பீரோக்களை உடைத்து அதில் இருந்த ஒரு கோடி ரூபாய் மற்றும் நகைகளை கொள்ளைடித்துச் சென்றனர்.
தகவலறிந்த தலைவாசல் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.