வேலுார்: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு போலீசார் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் உள்ள வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், பள்ளிகொண்டா ரங்கநாதர் காலனியில் ஜோதி என்பவர் வீட்டு படிகட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு கடத்த மறைத்து வைத்திருந்தது தெரியந்தது. தப்பியோடிய ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர்.