வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், தற்போதைய நிலவரப்படி புயலாக கரையை கடக்க கூடும். சென்னையிலிருந்து 350 கி.மீ, காரைக்காலில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
புதுச்சேரி ஸ்ரீ ஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்க கூடும். இந்நிலையில் 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விவரம் பின்வருமாறு: கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் , மயிலாடுதுறை புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, திருச்சி,திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல் (கொடைக்கானல் வட்டம்) ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.