பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. வழக்கம் போல் பா.ஜ.க., மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று 7வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த வெள்ளி முதல் சரிவில் முடிவடைந்துக் கொண்டிருந்த பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தைகள் சமீபத்தில் வரலாற்று உச்சத்தை அடைந்தது. உச்சநிலையில் இருந்து சந்தைகள் வீழக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. அதே போல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்தில் காணப்பட்டன. தினமும் முந்தைய நாளை விட சரிவைச் சந்தித்து வந்தது.
இன்றும் வர்த்த நேர துவக்கத்தில் இருந்து நண்பகல் வரை பல நிறுவனப் பங்குகள் சரிந்துக்கொண்டிருந்தன. இதற்கிடையே 2024 பாராளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் குஜராத் தேர்தலில், பா.ஜ.க., மிகப்பெரிய வெற்றியை 7வது முறையாக உறுதிச் செய்தது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை காணாமல் ஆக்கியுள்ளது.
![]()
|