தஞ்சாவூர்,: மாணடாஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நான்கு ஜே.சி.பி.க்கள், மூன்று காம்பாக்டர் லாரி, மூன்று டிப்பர் லாரி, இரண்டு மினி டிப்பர் லாரி, இரண்டு மினி ஹிட்டாச்சி, இரண்டு டிராக்டர், 46 டாடா ஏ.சி.இ., 100 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், ஒரு ஜெனரேட்டர், 10 மரம் வெட்டும் இயந்திரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடகிழக்கு பருவமழை 2022 முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்பாக 51 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் மீட்பு பணிக்கு அலுவலர்கள் பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 14 துப்புரவு கோட்டங்களை சார்ந்த, 12 துப்புரவு ஆய்வர்கள், 10 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். தேவையான அளவு பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் போதிய மருந்து பொருட்கள் இருப்பில் தயார் நிலையில் உள்ளது.
மாநகராட்சியில் 24 மணி நேர அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் உள்ளது. (தொலைபேசி எண்கள்-04362 232021 மற்றும் இலவச அழைப்பு எண்.1800 425 1100) என மாநகராட்சி மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.