வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆதரித்துள்ளனர் என குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் குஜராத்தில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ., ஏழாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இரு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று டில்லியில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது, வளர்ந்த இந்தியாவிற்கான சாமானியனின் ஆசை எவ்வளவு வலிமை என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
![]()
|
தேர்தல் முடிவுகளைப் பார்த்து மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். இத்தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் மக்கள் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். வளர்ச்சிக்கான அரசியலை குஜராத் மக்கள் ஆதரித்துள்ளனர். குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என டுவிட்டரிலும் மோடி பதிவேற்றியுள்ளார்.