வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை நலத் துறை அமைச்சர், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற, 'வீடியோ' வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் சலே முகமது.
![]()
|
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் காஜி பகீரின் மகன் தான், இந்த சலே முகமது. வாரிசு அரசியல் காரணமாக இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. சோனியாவுக்கு மிகவும் வேண்டியவர். ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இவரை அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் அசோக் கெலாட் நீக்கமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து காங்கிரஸ் தரப்பிலோ, அமைச்சர் சலே முகமது தரப்பிலோ எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.