ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெயால் இந்தியாவுக்கு 35,000 கோடி ரூபாய் மிச்சம்!

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ரஷ்யா வழங்கிய தள்ளுபடி கச்சா எண்ணெயை வாங்கியதால் இந்தியா சுமார் ரூ.35,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய எண்ணெயால் இந்தியா டாலரையும் வெளியே செல்லாமல் மிச்சப்படுத்தியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது. கடந்த 2021 இறுதியில் இருந்தே உலகளவில் விலைவாசி பிரச்னை
RussianOil, Petrol, Diesel, பெட்ரோல், எரிபொருள், கச்சாஎண்ணெய்

ரஷ்யா வழங்கிய தள்ளுபடி கச்சா எண்ணெயை வாங்கியதால் இந்தியா சுமார் ரூ.35,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய எண்ணெயால் இந்தியா டாலரையும் வெளியே செல்லாமல் மிச்சப்படுத்தியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது.

கடந்த 2021 இறுதியில் இருந்தே உலகளவில் விலைவாசி பிரச்னை எழுந்தது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுத்தது. அப்போதிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காண துவங்கியது. இதற்கிடையே பிப்ரவரியில் ரஷ்யா தனது படைகளை அண்டை நாடான உக்ரைனுக்குள் அனுப்பி போரை தொடங்கியது. தனது இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் படி நேட்டோ படையில் உக்ரைன் இணைய இருந்ததை எதிர்த்து இந்த கலகத்தை செய்தார் ரஷ்ய அதிபர் புடின். இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஐரோப்பா விதிக்கத் தொடங்கின. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா இதனால் பாதிப்படைந்தது. ரஷ்ய எண்ணெய் வரத்து தடுக்கப்பட்டதால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலர் வரை சென்றது.


latest tamil news

இந்த சமயத்தில் இந்திய அரசு தெளிவான ஒரு முடிவை எடுத்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் பாதையை பின்பற்றி ரஷ்யாவை எதிர்க்காமல், தனது சொந்த எரிசக்தி தேவைக்கு தான் முக்கியத்துவம் தருவது என்ற முடிவு தான் அது. இதன் மூலம் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை 30% தள்ளுபடியில் வழங்கியது. இன்னொரு புறம் அமெரிக்கா தனது நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது. டாலரில் முதலீடுகள் குவிந்ததால் அது வலுப்பெற்றது. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது. இதனால் இங்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்படும். அதையும் ரஷ்யா கச்சா எண்ணெய் குறைத்துள்ளது.

மே மாதம், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா பேரல் ஒன்றுக்கு 16 டாலர் தள்ளுபடியில் வாங்கியது. இருப்பினும் படிப்படியாக தள்ளுபடி குறைந்தது. ஜூன் மாதத்தில் பேரல் ஒன்றிற்கு 14 டாலர் ஆகவும், ஜூலையில் 12 டாலராகவும் ஆகவும், ஆகஸ்டில் 6 டாலராகவும் தள்ளுபடி குறைந்தது. கடந்த நிதியாண்டில் இந்தியா 2% அளவிற்கு மட்டுமே ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது. ஆனால் 2023 நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த 2 கோடி டன் எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. அதில் 16%, அதாவது 32 லட்சம் டன் ரஷ்ய எண்ணெய் ஆகும்.


விலை வரம்பு நிர்ணயம்


ரஷ்யா அளவுக்கு அதிகமாக தள்ளுபடி வழங்குவதாக கருதிய ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஜி7 கூட்டத்தை கூட்டி கடந்த டிச., 5 அன்று பேரல் ஒன்றை 60 டாலருக்கு கீழ் விற்கக் கூடாது என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சரக்கு கப்பல் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ரஷ்யா எண்ணெய் விற்றால் மட்டுமே சரக்குகளை கையாள முடியும். உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஜி7 நாடுகளில் இருப்பதால், இந்த முடிவு ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (11)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-202211:25:43 IST Report Abuse
venugopal s மிச்சம் செய்த அந்த 35000 கோடி ரூபாயை மத்திய பாஜக அரசு என்ன செய்தார்கள் என்றும் சொல்லி இருக்கலாமே!
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-டிச-202211:16:54 IST Report Abuse
g.s,rajan Ilavu Kaatha Kili Gold prices in India will never come down Mr.Vadiveel hence black money is enormously invested in the Gold. g.s.rajan Chennai.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-டிச-202210:39:50 IST Report Abuse
g.s,rajan We people are not ready to hear any unwanted explanations and excuses. We badly need the reduction of Petrol, Diesel, LPG prices hence the cost of living in India is going very high and leading one's life is much more difficult .The inflation is also very high because of the Skyrocketing cost of the fuel. The Income is meager but also the spending activities are still low then how the people will be able to Survive??? g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X