வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்; ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தேர்தல் பிரசாரத்திற்காக, ராணுவ வாகனம் ஒன்றை விலைக்கு வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக, இருபுறமும் உள்ள பல வீடுகளை இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, காரின் மேற்பகுதியில் அமர்ந்து பயங்கர வேகத்தில் சென்றதற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
![]()
|
இந்நிலையில் வரப்போகும் தேர்தல்களில் கட்சியை வலுப்படுத்திட , பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த வாகனம் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெரும் போது பயன்படுத்தும் டிரக் போன்றும் பச்சை நிறத்தில் உள்ளது.
இந்த வாகன மாடல் குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ராணுவ வாகனத்தை தனிநபர் பயன்படுத்துவது அதுவும்தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.