ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 21 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நெற்பயிர் வளர்ந்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக போதிய பருவ மழை இல்லாததால்ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விட்டன.
குறிப்பாக உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, சேந்தனேந்தல், கோவிலேந்தல், கலங்காப்புலி, வெட்டுக்குளம், ஏ.மணக்குடி, ஊரணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுஉள்ள நெற்பயிர்களில் 3000 ஏக்கரில் நெற்பயிர்கள் வயல்களில் ஈரப்பதம் இன்றி கருகிவிட்டன.
வானம் பார்த்த பூமியில் பருவ மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பருவ மழை ஏமாற்றியதால் கருகிய நிலையில் இப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.