6 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் 'ஆன்லைன்' கள்ளச் சந்தையில் விற்பனை

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பெங்களூரு,-நம் நாட்டைச் சேர்ந்த ஆறு லட்சம் பேரின் தனிப்பட்ட தரவுகள், 'பாட்' சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஹேக்கர்'கள் உலகம் கணினிகள், 'மொபைல் போன்'களுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடும், 'ஹேக்கர்'கள் உலகம் முழுதும் உள்ளனர். இந்த ஹேக்கர்கள் திருடும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு,-நம் நாட்டைச் சேர்ந்த ஆறு லட்சம் பேரின் தனிப்பட்ட தரவுகள், 'பாட்' சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



'ஹேக்கர்'கள் உலகம்



கணினிகள், 'மொபைல் போன்'களுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடும், 'ஹேக்கர்'கள் உலகம் முழுதும் உள்ளனர்.

இந்த ஹேக்கர்கள் திருடும் தரவுகள், 'பாட் மார்க்கெட்' எனப்படும், தரவுகளுக்கான கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு தனிப்பட்ட நபரின், 'டிஜிட்டல் ஐடென்டிட்டி' எனப்படும், உள்ளீடு முகவரி, விரல் ரேகை பதிவு, 'மொபைல் போன் ஸ்கிரீன் ஷாட்'கள் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் சராசரியாக 490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கள்ளச்சந்தை 2018ல் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து, உலகம் முழுதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தரவுகளை வாங்குகின்றன.


50 லட்சம் தரவுகள்



இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்யப்படும் தரவுகள் குறித்து, ஐரோப்பிய நாடான லித்துவேனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டன.

இதன் விபரம்:

இந்த பாட் மார்க்கெட்டில், ஒரு நபர் குறித்த அதிகப்படியான தகவல்களை ஒரே இடத்தில் பெற முடியும். மேலும், 'ஹேக்' செய்யப்பட்ட உபகரணம் கட்டுப்பாட்டில் உள்ள வரை, விற்பனை செய்யப்பட்ட தரவுகளை அவ்வப்போது புதுப்பித்தும் தருகின்றனர்.


latest tamil news


கடந்த நான்கு ஆண்டுகளில் உலகம் முழுதும் 50 லட்சம் தரவுகள் பாட் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில், இந்தியாவில் இருந்து மட்டும் ஆறு லட்சம் தரவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஊடுருவலில் இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

09-டிச-202218:37:53 IST Report Abuse
அப்புசாமி யாருக்காவது வேணும்னா உபயோகமில்லாத என்னுடைய தகவல்களை தருகிறேன். 15 லட்ச ரூவாதான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-டிச-202213:16:40 IST Report Abuse
அசோக்ராஜ் குதிரை வட்டை எத்தனை டன் கிடைத்தும் என்ன பிரயோசனம்? ஆறு லட்சம் தரவுகளும் அப்படிப் பட்டதுதான். வேஸ்ட் மெட்டீரியல்.
Rate this:
Cancel
09-டிச-202212:11:42 IST Report Abuse
அப்புசாமி பெருசா ஒரு போனை வெச்சுக்குட்டு கண்ட கண்ட ஆப்களை டவுன்லோட் செஞ்சுக்கறவங்க, இங்கே க்ளிக் செஞ்சா 10000 ரூவாய்னா நம்பி லிங்க்கை அமுக்கறவங்க இவிங்களோட தகவல்தான் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X