ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ் கட்சியை தேசிய கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கடந்த அக்டோபர் 5-ம் தேதி தனது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை தேசிய கட்சியாக அறிவித்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் பெயரை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி என பதிவு செய்தார்.இந்நிலையில் இவரது கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் கடந்த நவ. 7-ம் தேதி சட்டப்படி பொது அறிவிப்பாக வெளியிட்டது. இதையடுத்து பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது .