வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை-சபரிமலையில் இன்று மற்றும் வரும் 12லும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளதால், இதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
![]()
|
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், இந்த 'சீசனில்' பக்தர்கள் 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், தினமும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர் என்பதை முன்கூட்டியே தெரிந்து, அதற்கேற்ப தேவசம் போர்டும், போலீசும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்த சீசன் துவங்கிய பின், கடந்த 5ல் அதிகபட்சமாக 90 ஆயிரத்து 188 பேர் முன்பதிவு செய்து, 82 ஆயிரத்து 573 பேர் தரிசனம் செய்தனர். நேற்று 96 ஆயிரத்து 30 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
![]()
|
இதனால், நடை திறந்தது முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்றும், 12ம் தேதியும் ஒரு லட்சத்துக்கும்அதிகமானவர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இனி வரும் நாட்களிலும்,கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் அதிக பக்தர்கள் வருவர் என்பதால், கூடுதலாக 1,100 போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வந்துள்ளனர்.
இதுபோல அரவணை பிரசாதம் தட்டுப்பாடு வராமல் இருக்கவும் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement