வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-உலக அளவிலான பல் வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து, நம் நாட்டின் கண்ணோட்டத்தை சர்வதேச நாடுகளிடம் முன்வைக்கவும், உலகளாவிய நிலைபாட்டை வடிவமைக்கவும் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் உதவிகரமாக இருந்ததாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்தது.
![]()
|
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை, அதனால் கிடைத்த பலன்கள் மற்றும் அதற்கு ஆன செலவுகள் குறித்து தெரிவிக்குமாறு, ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 36 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
அதில், 31 பயணங்களுக்கான செலவு விபரங்களை அளித்தள்ளார்.
இதன் விபரம்:
பிரதமரின் 31 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 239 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில், 2019 செப்., 21 - 28 வரை அவர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்துக்கு அதிகபட்சமாக 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்., 26 - 28 வரையில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட வகையில், குறைந்தபட்சமாக 23 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுஉள்ளது.
நம் தேசிய நலன் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை நிறைவேற்ற இந்த பயணங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நம் நட்பு நாடுகளுடன் நம் உறவை வலுப்படுத்த உதவுகிறது.
![]()
|
மேலும், பன்முகத்தன்மை, பருவநிலை மாற் றம், நாடு கடந்த குற்றங்கள், பயங்கரவாதம், 'சைபர்' பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து நம் நாட்டின் கண்ணோட்டத்தை சர்வதேச நாடுகளிடம் முன்வைக்கவும், உலகளாவிய நிலைபாட்டை வடிவமைக்கவும் இந்த பயணங்கள் உதவியாக உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement