வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'அக்டோபர் முதல் முடக்கப்பட்டுள்ள, 350 ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.
![]()
|
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 2020 மார்ச் 4க்கு முன், தினசரி, 4,000 ஆம்னி பஸ்கள் இயங்கின; 1.25 லட்சம் பேர் பயணம் செய்தனர். பின், கொரோனா பரவல் காரணமாக, ஆம்னி பஸ் தொழில் பாதிப்படைந்து, 1,600 பஸ்கள் மட்டும் தற்போது இயங்குகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், மத்திய, மாநில அரசு விதித்த முழு ஊரடங்கால், ஆம்னி பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டன. அதன்பின், 850 பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டன.
கடந்தாண்டு தீபாவளியின்போது, ௩௫௦ பஸ்களை, உரிய வரி செலுத்தி இயக்க அனுமதி கோரி, பஸ் உரிமையாளர்கள் சார்பில், போக்குவரத்து துறை கமிஷனரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
போக்குவரத்து துறை அனுப்பிய கோப்பின் மீது, ஒன்பது மாதங்களாக, நிதித்துறை எந்த முடிவையும் எடுக்காததால், அரசுக்கும், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஸ் உரிமையாளர்கள் மற்றும் 12 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, முதல்வர் தலையிட்டு,ஆம்னி பஸ்களை இயக்காத காலங்களுக்கு, சாலை வரியை ரத்து செய்யவதோடு, பஸ்களை இயக்க அனுமதி அளித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்களையும், பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்.
![]() |
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement