சென்னை:சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் செல்ல இருந்தது.
இதில் பயணிப்பதற்காக இந்திய பாஸ்போர்ட்டுடன் பிபுல் மண்டல் 35 என்பவர் சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்துள்ளது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது. இதையடுத்து மண்டலிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி போலி பாஸ்போர்ட் வாங்கியதாக தெரிவித்தார்.
மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
வங்கதேசத்தை சேர்ந்த பெண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் வாயிலாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் மலேசியா செல்ல முயன்றபோது கைதானார்.