திருப்பூர்:சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில், 4ம் தேதி, ஈரோடு மண்டலத்துக்கான தடகள போட்டிகள் நடந்தது.
இதில் பங்கேற்ற பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பல பிரிவுகளில் வெற்றி பெற்றனர். ஈட்டி எறிதலில் இரண்டாம் ஆண்டு மேலாண்மைத்துறை மாணவர் அஜய் முதலிடம், இதே துறையை சேர்ந்த மாணவி, ஆர்த்தி நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீ., ஓட்டத்தில் முதலிடம். 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் ஆர்த்தி, ஆனந்தி, தமிழரசி, அஞ்சலி ஆகியோர் குழு இரண்டாமிடம். 5,000 மற்றும், 10 ஆயிரம் மீ., ஓட்டம் இரண்டிலும் மாணவி ஆனந்தி இரண்டாமிடம்.
இக்கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில், நான்காமிடம் கைப்பற்றியது. மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், காங்கயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ், குழும தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பாலசுப்ரமணியம், தாளாளர் ஆனந்த வடிவேல் ஆகியோர் பாராட்டினர்.