வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக விழா நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தனபூஜை, கோ பூஜை, மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, நாளை காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 10:55 மணிக்கு விமானங்கள், ராஜ கோபுரங்களுக்கும், 11:15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் விஜயராணி, ஆய்வாளர் உமா மகேஸ்வரி, மேலாளர் ரவி, சங்கர் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.