கோவை:தமிழகத்தில், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும், உலக வங்கி நிதியுதவியுடன், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சர்க்கார் சாமக்குளம் ஆகிய வட்டாரங்களில், 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்களை மேம்படுத்தவும் சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த ஐந்து பயனாளிகளுக்கு, மானியத்துடன் ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை, கலெக்டர் சமீரன் வழங்கினார்.
மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.