வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'குஜராத்தில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி, 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
குஜராத்தில், 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ., மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடலுக்கு, குஜராத் மக்கள் வழங்கிய வெகுமதி. சிறப்பான வெற்றிக்காக குஜராத் பா.ஜ.,வுக்கும், 1.92 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற, அம்மாநில முதல்வர் பூபேந்திராவுக்கும் வாழ்த்துகள்.
பா.ஜ.,வுக்கு, 2012ல் 47.9 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம், 2017ல், 50 சதவீதமாகவும், தற்போது, 52.60 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் மணிநகர் தொகுதியில், 75 சதவீத வாக்காளர்கள் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்து உள்ளனர். பிரதமர் மோடி மீது, இடம்பெயர்ந்த தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத பாசத்தை நிரூபிக்கிறது.
![]()
|
குஜராத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும், 14 தொகுதிகளில், 12ல் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., வேட்பாளர்கள், 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில், 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது, அவர்களின் முந்தைய சாதனையை இரட்டிப்பாக்கி உள்ளது. குஜராத்தின் வெற்றி, 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement