வால்பாறை:வால்பாறை அருகே, குப்பை கொட்ட சென்ற பெண் தொழிலாளி, காட்டுப்பன்றி கடித்ததில் படுகாயமடைந்தார்.
வால்பாறையில், யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடுகள் உள்ளிட்டவை, குடியிருப்பு பகுதியில் அதிகளவில் சுற்றுவதால், வனவிலங்கு - மனித மோதல் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்நிலையில், சோலையாறு எஸ்டேட் இரண்டாம் பிரிவில், தொழிலாளியாக பணி புரிந்து வருபவர் ஜெபஸ்டீன். இவரது மனைவி மேரி,60. இவர் நேற்று மதியம், 2:30 மணிக்கு வீட்டின் பின்பக்கம் குப்பை கொட்ட சென்றார்.
அப்போது, காட்டுப்பன்றி அவரது வலது காலை கடித்தது. அவரது அலறல் சப்தம் கேட்டதும், அவரை விட்டு காட்டுப்பன்றி ஓடியது. படுகாயமடைந்த அவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். காயமடைந்த தொழிலாளிக்கு, வனத்துறை சார்பில், ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.