திருப்பூர்:மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் மாநில ஆறாவது தடகள விளையாட்டு போட்டி, சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், நடந்தது. திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். 17 வயது உயரம் தாண்டுதலில் பத்தாம் வகுப்பு இப்பள்ளி மாணவர், ஜெப்ரி, 1.69 மீ., உயரம் தாண்டி, இரண்டாமிடம் பெற்று, வெள்ளி பதக்கம் வென்றார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளார்.
பத்தொன்பது வயது, உயரம் தாண்டுதலில் பிளஸ் 2 மாணவர் சண்முகம், 1.70 மீ., உயரம் தாண்டி, மூன்றாமிடம் பெற்று, வெண்கலம் பதக்கம் வென்றார். மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.