சென்னை:வங்கக் கடலில் சிக்கி தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டனர்.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, 50 முதல் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலுாரில் இருந்து வங்கக் கடலில் 30 கடல் மைல் துாரத்தில், மிதக்கும் கச்சா எண்ணெய் துரப்பண மையம் அமைந்துள்ளது.
இதில், மூன்று நபர்கள் சிக்கி இருப்பதாக, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர காவல்படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர், மிதக்கும் உற்பத்தி மையத்தில் சிக்கி இருந்து மூவரை பாதுகாப்பாக மீட்டு, புதுச்சேரியில் கரை சேர்த்தனர்.