திருப்பூர்:திருச்சியை சேர்ந்தவர் பார்கவி, 24. இவர் பெற்றோருடன் திருப்பூர், இடுவம்பாளையத்தில் வசித்து வருகிறார். கல்லுாரியை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சமீபத்தில் பார்கவியின் சம்மதத்துடன் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தனர்.
வரும் 11ம் தேதி திருச்சியில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் பெற்றோர் திருமண பத்திரிகை கொடுக்க வெளியில் சென்ற நிலையில், வீட்டில் இருந்த பார்கவி வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.