சென்னை:குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் தேர்தலில், வரலாறு காணாத வெற்றி பெற்றதற்காகவும், தொடர்ந்து ஏழாவது முறை ஆட்சியை பிடித்ததற்காகவும், பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக, பழனிசாமி தன் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குஜராத் தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக, பா.ஜ., வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா ஆகியோருக்கு, பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.