வால்பாறை;வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 36ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, வரும், 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமி ஆராட்டு விழா நடக்கிறது. 17ம் தேதி, காலை, 11:00 மணிக்கு அன்னதானமும்; 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.