குஜராத்தில் அமோக வெற்றி கமலாலயத்தில் உற்சாகம்

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் முன், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.இதற்காக, மாநிலம்
 குஜராத்தில் அமோக வெற்றி  கமலாலயத்தில் உற்சாகம்

சென்னை: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் முன், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.

இதற்காக, மாநிலம் முழுதும் இருந்து நிர்வாகிகள், கமலாலயம் வந்தனர். குஜராத் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, காலை துவங்கியதில் இருந்து, பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

அக்கட்சி, இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகளை கைப்பற்றி, குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து நேற்று, கமலாலயம் முன் குவித்த பா.ஜ., தொண்டர்கள், பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

eetrtet - chennai,இந்தியா
09-டிச-202210:06:10 IST Report Abuse
eetrtet குஜராத் மாநில பாஜ அலுவலகத்தின் கிளையாக மாறிவிட்டது கமலாலயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X