உடுமலை:உடுமலை நகராட்சியில், நவீன இயந்திரம் வாயிலாக, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. குடியிருப்புகளில் உள்ள குழாய்களில், அடைப்பு ஏற்படும் போது, ஆளிறங்கு குழி மூடி வழியாக கழிவு நீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, அடைப்புகள் ஏற்பட்டால், சீரமைக்க கழிவு நீர் உறிஞ்சு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் வாயிலாக, அகற்றப்பட்டு வந்தது.
இதற்கும் தொழிலாளர்கள் தேவை உள்ள நிலையில், அடைப்புகளை நீக்க, தற்போது நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் வாயிலாக, பாதாள சாக்கடை, ஆளிறங்கும் குழியில், பொருத்தப்பட்டு, அடைப்புகள் நீக்கப்படுகிறது. இதனால், கழிவுகள் அகற்றும் பணியில், தொழிலாளர்கள் நடைமுறைக்கு தீர்வு கிடைத்துள்ளது; பணியாற்றுபவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.