இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்' :இன்ஜினியர் கொலையில் எட்டு பேருக்கு ஆயுள்

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் திரிணமுல் எம்.எல்.ஏ., வங்கி கணக்கு முடக்கம்புதுடில்லி-மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாணிக் பட்டாச்சாரியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆசிரியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


இந்திய நிகழ்வுகள்திரிணமுல் எம்.எல்.ஏ., வங்கி கணக்கு முடக்கம்


புதுடில்லி-மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாணிக் பட்டாச்சாரியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆசிரியர் நியமனத்தில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், மேற்கு வங்க துவக்க கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான மாணிக் பட்டாச்சாரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. மாணிக் பட்டாச்சாரியா, பல உறவினர்களின் பெயரில், ௬௧ வங்கி கணக்குகள் துவக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பல நிரந்தர வைப்பு நிதி கணக்குகளையும் துவக்கியுள்ளார்.

மாணிக் பட்டாச்சாரியா மற்றும் அவருடைய உறவினர்கள் பெயரில் உள்ள, ௭.௯௩ கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


மத உணர்வை தூண்டும் புத்தகம்: ம.பி.யில் ஆசிரியர் கைதுஇந்துார்-மத்திய பிரதேச சட்டக் கல்லுாரியில் இருந்த புத்தகத்தில் மத உணர்வை துாண்டும் வகையிலான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மத பயங்கரவாதம்

இங்கு இந்துாரில் உள்ளஅரசு சட்டக் கல்லுாரி நுாலகத்தில், 'குழு வன்முறை மற்றும் குற்றவியல்நீதி அமைப்பு' என்ற புத்தகம் இருந்தது. இதை, பர்ஹத் கான் என்ற பெண்எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்தில் மத உணர்வு மற்றும் மத பயங்கரவாதத்தை துாண்டும் வகையிலான கருத்துக்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து அமைப்புகளுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்று இருந்ததாக புகார் எழுந்தது.

புகார்

இது குறித்து, பா.ஜ., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., சார்பில் மத்திய பிரதேச போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து புத்தகத்தின் ஆசிரியர், கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பா.ஜ., மாணவர் அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பர்ஹத் கான் நேற்று கைது செய்யப்பட்டார்.

தினமும் 'டயாலிசிஸ்'

இது குறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:

மத உணர்வை துாண்டும் வகையிலான புத்தகத்தை எழுதியதாக, பர்ஹத் கான் புனேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தினமும், 'டயாலிசிஸ்' செய்ய வேண்டியுள்ளது. இதனால், அவர் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


சர்ச்சை வீடியோவில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்


ஜெய்ப்பூர்-ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை நலத் துறை அமைச்சர், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற, 'வீடியோ' வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.


latest tamil news


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் சலே முகமது.

இவர், அரைகுறை உடையணிந்துள்ள ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ராஜஸ்தான் அரசியலில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, சலே முகமதுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும்படி பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் காஜி பகீரின் மகன் தான், இந்த சலே முகமது. வாரிசு அரசியல் காரணமாக இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. சோனியாவுக்கு மிகவும் வேண்டியவர். ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இவரை அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் அசோக் கெலாட் நீக்கமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் தரப்பிலோ, அமைச்சர் சலே முகமது தரப்பிலோ எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.


தமிழக நிகழ்வுகள்
பயங்கரவாதியின் கூட்டாளிகள் புழல் சிறையில் அடைப்புசென்னை:கோவை கார் குண்டுவெடிப்பில் பலியான ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின் கூட்டாளிகள் மூவரை டிச., 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்.23ல் அதே பகுதியை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின் 29 கார் குண்டு வெடிப்பு நடத்தி பலியானார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜமேஷா முபின் மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னுாரை சேர்ந்த உமர் பரூக் 39; போத்தனுாரை சேர்ந்த முகமது தவ்பீக் 25; தெற்கு உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான் 28 ஆகியோர் அடிக்கடி ஜமேஷா முபினுடன் பேசியது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஜமேஷா முபினுடன் சேர்ந்து ஹிந்து கோயில்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டனர்.

இவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் தயாரிப்பது பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதன் பின் மூவரையும் கைது செய்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லியில் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் மூவரையும் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை டிச., 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


போலி பாஸ்போர்ட் வங்கதேச பயணி கைதுசென்னை:சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் செல்ல இருந்தது.

இதில் பயணிப்பதற்காக இந்திய பாஸ்போர்ட்டுடன் பிபுல் மண்டல் 35 என்பவர் சென்னை விமான நிலையம் வந்தார்.

அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்துள்ளது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது. இதையடுத்து மண்டலிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி போலி பாஸ்போர்ட் வாங்கியதாக தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

வங்கதேசத்தை சேர்ந்த பெண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் வாயிலாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் மலேசியா செல்ல முயன்றபோது கைதானார்.


எட்டு கிலோ குட்கா பறிமுதல்திண்டுக்கல்-திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி.காலனி பகுதியில் மளிகை கடை நடத்துபவர் பாலசிங்41. 8 கிலோ குட்கா வைத்திருந்ததாக இவரை தாலுகா எஸ்.ஐ., விஜய் கைது செய்தார்.


இன்ஜினியர் கொலையில் எட்டு பேருக்கு ஆயுள்ராமநாதபுரம்:சொத்து பிரச்னை தகராறில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் தமிழரசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.latest tamil news


ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் தமிழரசன் 59. இவரது மாமன் மகள் மகமாயிக்கும், தில்லைநாயகபுரம் கோபால் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதில், மகமாயிக்கு நிலத்தை பெற்றுத்தர தமிழரசன் உதவி செய்தார்.

இதனால் கோபாலுக்கும், தமிழரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்தது. இந்த விரோதம் காரணமாக 2015 ஜூலை 12ல் தமிழரசன் டூவீலரில் சென்ற போது சேதுபதிநகர் வடக்கு இ.சி.ஆர்., ரோட்டில் மறைந்திருந்த 8 பேர் கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

தமிழரசன் மனைவி மீனாகுமாரி 51, புகாரில், கேணிக்கரை போலீசார் கோபால் 81, அவரது மகன்கள் மாதவ மகேஷ் 27, பால யோகேஷ் 32, ராமசாமி மகன் செல்வம் 27, சீனிவாசன் 46, விஜயகுமார் 42, பிச்சை மகன் முத்துராஜ் 37, கோபி 40, ஆகிய எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கோபால், மாதவ மகேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், மற்றொரு மகன் பால யோகேஷ் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், கோபால், மாதவ மகேஷ்க்கு தலா ரூ.20 ஆயிரம், மற்ற 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


உண்டியல் திருடன் கைதுபழநி;பழநி மலை முருகன் கோயில் மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. தென்காசியை சேர்ந்த சுந்தர் 40, அடிவாரம் கிரிவீதி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் மலைக்கோயிலில் உள்ள உண்டியலில் இருந்து ரூ.300 திருடினார். பழநி அடிவாரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம் இளம்பெண்ணை கொன்ற டிரைவர் கைது

தஞ்சாவூர்:திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம்பெண்ணைக் கொலை செய்து, வாய்க்காலில் உடலை வீசிய தனியார் பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மேல உளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா, 26; கல்லுாரி படிப்பு முடித்தவர். மாவட்ட மைய நுாலகத்திற்கு செல்வதற்காக, மேல உளூரில் இருந்து, தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் தினமும் சென்று வந்தார்.

கடந்த, 6ம் தேதி முதல் அவரை காணவில்லை; பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாக தகவல் வந்தது.

தஞ்சாவூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அவர் காணாமல் போன அகல்யா என்பது தெரிந்தது.

அவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். கடைசியாக தொடர்பு கொண்ட தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த நாகராஜ், 25, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்சில், டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேல உளூரில் இருந்து, தினமும் தஞ்சாவூருக்கு செல்லும் அகல்யாவுடன் மூன்று மாதங்களாக, அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். அதற்கு நாகராஜ் மறுத்து வந்தார். மேலும், நாகராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது அகல்யாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கடந்த, 6ம் தேதி அகல்யாவை, காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, துப்பட்டாவால் அகல்யா கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

அதே காரில், அவரது உடலை எடுத்து வந்து வாய்க்காலில் வீசியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X