வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, சில ஆண்டுகளாக அதிகமாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வருவாய் பற்றாக்குறை, 16 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த, 15 மாதங்களில், 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: இதெல்லாம் தங்களது சாதனையாக எடுத்து கொள்ளலாமா... ஏன் இந்த, 'டவுட்' எழுகிறது என்றால், மற்ற அமைச்சர்கள் எல்லாம், 'முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால், இந்த வளர்ச்சி கிடைச்சது'ன்னு பெருமையா சொல்றாங்க... நீங்க மறந்தும் கூட, முதல்வரை பாராட்ட மாட்டேங்கிறீங்களே... அதான் கேட்கிறோம்!