''நம்ம தெருமுக்குல கடை வச்சிருக்காரே, ரமேஷ்சந்த் சேட்டு... அவர் புதுசா கார் வாங்கிருக்கார் ஓய்... இப்பத் தான் ஒரு, 'ரவுண்ட்' போயிட்டு வரேன்...'' என்றபடியே, 'என்ட்ரி' கொடுத்தார் குப்பண்ணா.
![]()
|
''காருன்னதும் ஒரு சங்கதி நினைவுக்கு வருது வே... தமிழகத்துல, 'சக்தி'மிக்க துறையின் செயலரா இருக்கிற மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டுல, நாலுக்கும் மேற்பட்ட அரசு கார்கள் இருக்கு...
''சாரோட ரெண்டு மகளுமே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான்... வீட்டுல ஒரு செல்ல நாய் இருக்கு... அதை தினமும், அரசு இன்னோவா கார்ல தான், 'ரவுண்ட்' கூட்டிட்டு போறாவ வே...
![]()
|
''வீட்டு வேலைக்காக எட்டு அரசு ஊழியர்கள் இருக்காவ... அவங்க காலையில, 5:00 மணிக்கே வேலைக்கு வந்துரணும்... ராத்திரி, 12:00 மணி வரை சக்கையா பிழிஞ்சு எடுக்காவ வே...
''அவங்களுக்கு, 'அம்மா' உணவகத்துல இருந்து தான் இட்லி வாங்கி குடுக்காவ... தங்களது வீட்டு சாப்பாட்டை எடுத்துட்டு வந்து சாப்பிடவும், அதிகாரியின் வீட்டம்மா அனுமதிக்க மாட்டேங்காவ... 'கொத்தடிமை மாதிரி வேலை வாங்குதாங்க'ன்னு ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement