வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே--'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் கார்களின் விலையை, வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கார் வகையைப் பொறுத்து, 1.5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
![]()
|
இதுகுறித்து, 'பென்ஸ் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ஷ்வெங்க் கூறியதாவது:
பணவீக்கம் மற்றும் தயாரிப்புச் செலவு அதிகரிப்பு ஆகியவை காரணமாகவும், பென்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகள், நிலையான மற்றும் லாபகரமான வணிகத்தை தொடர்வதற்காகவும் இந்த விலை மாற்றத்தை செய்துள்ளோம்.
![]()
|
விலை பாதிப்பின் பெரும்பகுதியை நிறுவனமே ஏற்றுக் கொண்டாலும், தற்போது வேறு வழியின்றி, விலை உயர்வின் சிறிய பகுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சூழலில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.எல்.ஏ., 200 | ஜி.எல்.ஏ., 220டி., 46.5 லட்சம் | 48 லட்சம்சி_200 | சி_220டி., 57.5 லட்சம் | 58.5 லட்சம்இ _200 எக்ஸ்குளுசிவ் | இ_220டி எக்ஸ்குளுசிவ் 72.5 லட்சம் | 73.5 லட்சம்ஜி.எல்.இ., 300 டி_ 4எம்., | ஜி.எல்.இ., 400டி_ 4எம்., 88 லட்சம் | 1.05 கோடி எஸ்_ 350 டி., 1.65 கோடிமெர்சிடிஸ் - மேபேக் எஸ்_ 580 2.57 கோடிமெர்சிடிஸ் - மேபேக் ஜி.எல்.எஸ்., 600 _சி.பி.யு., 2.92 கோடி